உங்கள் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமானதாகவும் சலிப்பானதாகவும் மாற நீங்களும், உங்கள் துணையும் மட்டுமே காரணம். பாலியல் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் மற்றும் செயல்கள் உள்ளன. எப்போதும் ஒரே மாதிரியான பாலியல் நிலை மற்றும் செயல்பாடுகள் தம்பதிகள் இருவரையும் சலிப்படைய வைக்கலாம். உங்கள் பாலியல் ஆர்வத்தை குறைக்கலாம். புதியபுதிய நிலைகளை முயற்சிக்கவும், நன்றாக செயல்படவும் இருவரும் சேர்ந்து முடிவு செய்யும்போது, உங்கள் பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்கும். உங்கள் படுக்கையறை உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லா நேரங்களிலும் எல்லாராலும் சரியாக இருக்க முடியாது. நம்மை அறியாமல் நாம் சில தவறுகளை செய்திருப்போம்.
ஆண்களே! படுக்கையறையில் செய்யும் தவறுகளை நீங்கள் மாற்ற வேண்டும். இல்லையெனில், இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். நன்றாகப் பேசாமல் இருப்பது முதல் ஃபோர்பிளேவின் முக்கியத்துவத்தை மறப்பது வரை, ஆண்கள் பல பாலியல் தவறுகளைச் செய்கிறார்கள். இவை உங்கள் உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெண்களை உடலுறவில் இருந்து விலக்கி வைக்கும் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.நன்றாகப் பேசும் திறன் எல்லா ஆண்களுக்கும் இருக்கும் ஒரு பண்பு அல்ல என்பதை பெண்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை அணுகி பயனுள்ள விவாதத்தை தொடங்குவதற்கு ஒவ்வொரு ஆணுக்கும் திறமை தேவை. வசதிக்காக, ஆண்கள் உடலுறவுக்கு அழைப்பதை விட மனம் விட்டு பேச பெண்கள் விரும்புகிறார்கள். தகவல்தொடர்பு வடிவமாக குறுஞ்செய்தியில் உரையாட ஆண்கள் விரும்பலாம், அதே சமயம் பெண்கள் வாய்மொழி உரையாடலை வெகுவாக விரும்புகிறார்கள். நீங்கள் உடலுறவில் ஈடுபட போவதற்கு முன்பும், ஈடுபடும்போதும், ஈடுபட்ட பின்பும் உங்கள் துணையுடன் அன்பாக பேச வேண்டும். இது பெண்களை நன்றாக உணர வைக்கும்.
ஆண்கள் தங்கள் துணையின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிக்க முயற்சிக்காமல் இருப்பது உடலுறவுக்கு நல்லது. ஒரு பெண்ணுக்கு எது சிறந்தது என ஆண்கள் புரிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் வேண்டும். அதைவிடுத்து, அவளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது. அவள் விரும்புவதையும் அவள் எப்படிச் செய்ய விரும்புகிறாள், நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று விரும்புகிறாள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு உடலுறவில் செயல்பட வேண்டும்.
பல ஆண்கள் தங்கள் விருப்பங்களை பெண்களுக்கு வெளிப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். உடலுறவு பற்றி வாய்வழியாக பேச அவர்கள் தயங்குகிறார்கள். ஆதலால், அவர்களின் எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு திறன் இல்லாமல் இருக்கிறது. உடலுறவில் ஆண்கள் ஆக்ரோஷமாக இருக்கும்போது, பெண்கள் வலியை அனுபவிக்கிறார்கள். இது அவர்களை மன ரீதியாக பாதிக்கும். இவ்வாறு செயல்படும் முன்பு, அவர்களின் பேசுவது நல்லது. பெண்களின் விருப்பங்களை கேட்டு செயல்படுங்கள்.
பல ஆண்கள் தங்கள் விருப்பங்களை பெண்களுக்கு வெளிப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். உடலுறவு பற்றி வாய்வழியாக பேச அவர்கள் தயங்குகிறார்கள். ஆதலால், அவர்களின் எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு திறன் இல்லாமல் இருக்கிறது. உடலுறவில் ஆண்கள் ஆக்ரோஷமாக இருக்கும்போது, பெண்கள் வலியை அனுபவிக்கிறார்கள். இது அவர்களை மன ரீதியாக பாதிக்கும். இவ்வாறு செயல்படும் முன்பு, அவர்களின் பேசுவது நல்லது. பெண்களின் விருப்பங்களை கேட்டு செயல்படுங்கள்.


0 Comments